·
சங்கு-
ஓர் ஆய்வு –12.-
தமிழர் இசைக்கருவிகள்
வெண் சங்கு (சாங்கசு பைரம், Xancus pyrum) கடல்
நத்தை வகையைச் சேர்ந்த மெல்லுடலி ஆகும். இது வலம்புரிச்
சங்கு எனவும் சிலுவைச் சங்கு
எனவும், தட்சணாமூர்த்திச் சங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இந்தியச் சங்கு இனம், தற்போது டர்பினல்லா பைரம்[1] (Turbinella
pyrum) எனவும் அழைக்கப்படுகிறது. சாங்கசு என்னும் சங்கினத்தில் சாங்கசு பைரம், சாங்கசு ஆங்குலேட்டர் .
லேட்டசு, சாங்கசு ,
லேவிகேட்டர் என்ற மூன்று சிற்றினங்கள் உள்ளன. இந்த மூன்று வகைகளில் சாங்கசு பைரம் என்னும் சங்கே சிறப்பானது.
சேகண்டி அல்லது சேமக்கலம்,
மேலும் இதனைச் சவுண்டி , செகண்டை , செயகண்டி , செயகண்டிகை , என்றும் அழைக்கப்படுகிறது.
சேமக்கலத்தை வெண்கலத்தால் வட்ட வடிவமாக
உருவாக்கப்படுகிறது. வெண் சங்கொலியுடன், சேகண்டி
அல்லது சேமக்கலத்தை, கனத்த தேக்கு குச்சியால் அடித்து ஒலி
எழுப்பப்படுகிறது.
திருச்சங்கு திருமாலுக்கு உரியது.
சேமக்கலம் சிவனுக்கு உரியது.
சிவனும், திருமாலும் ஒன்றே என்ற உயர்ந்த தத்துவத்தை
விளக்கும் பொருட்டு சேமக்கலத்தை, சங்கொலியுடன் இணைத்து இசைக்கப்படுகின்றன.[1]
சிவன் கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போது சேமக்கலம் எனும்
சேகண்டி இசை ஒலி எழுப்பப்படுகிறது. பிற்காலத்தில் மனித இறப்புகளில் சேகண்டியுடன் சங்கு ஒலிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. இறப்புகளில்
வாசிக்கப்படும் பித்தளையால் ஆன சேமக்கலத்தை சேகண்டி அல்லது சவுண்டி அல்லது சேகண்டி
என்பர்.
மேற்கு வங்காள மாநிலத்தில்
திருமண விழாவின் போது சேமக்கல ஒலியுடன், சங்கொலி மற்றும் குலவை ஒலி பெண்களால் எழுப்பப்படுகிறது.
பெயர்க் காரணம்
சோமன் எனும் சந்திரன் போன்ற வட்ட
வடிவ அமைப்பு கொண்ட சேகண்டிக்கு சோமன் கலம் .
என்ற பெயராயிற்று. பின்னர் இப்பெயர் மறுவி சேமக்கலம், சேகண்டி என்றாயிற்று.
………………………………..தொடரும்……………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக