சங்கு-
ஓர் ஆய்வு –8.-
தமிழர் இசைக்கருவிகள்
சங்க இலக்கியத்தில் ...!
“ வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதற்
ஓளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு
இயம்ப நுண்பனி அரும்பக்
கையற வந்த
பொழுதொடு மெய் சோர்ந்து.” –நற்றிணை.
தித்தன் நகரின்கண் முரசு இருக்கும் கட்டிலிடத்தே
வரிசையாக ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளின் வரிசைக்கு கடற்கரையில் வரிசையுறக் கிடந்த
முழங்கும் சங்குகள் உவமம். காலையிலும் அந்திப் பொழுதிலும் செல்வர் வாழும்
நகரங்களில் சங்கு முழங்குவது பண்டைய நாளை மரபு.
“பிணர்மேட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர்மூக்கு
ஆரல் களவன் ஆக
நெடுநீர்ப்
பொய்கைத் துணையொடு புணரும்.” அகநானூறு.
சருச்சரை பொருந்திய உடலினையும் பெரிய வாயினையும்
உடைய ஆண் சங்கு, கதிர் நுனை போலும் மூக்கையுடைய ஆரல் மீன் சாட்சியாக ஆழமான நீரை உடைய பொய்கையில்
பெண் சங்கினொடு புணரும். நீர் வாழ் உயிரினங்களுள் ஒன்றான ,சங்கு இனப்பெருக்கம் குறித்துள்ளார் புலவர். மேற்குறித்துள்ள சான்றுகளால் சங்கு கடலிலும் ஆழமான நீர்நிலைகளிலும் வாழும் என்பதை
அறியமுடிகிறது.
””கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப்
பெயரிய பேரிசை மூதூர்
கடனறி மரபின்
கைவல் பாண
தென்கடல்
முத்தமொடு நன்கலம் பெருகுவை. –பதிற்றிப்பத்து.
பாணனே.! கொடுமணம் என்னும் ஊரிலே உண்டான நல்ல அணிகலன்களையும் பந்தர் என்னும் பெயருடைய
புகழ் வாய்ந்த பழைய ஊரிடத்தே உள்ள தெளிந்த கடலின் முத்துக்களையும் பெறுவாயாக.
இலக்கியத்தில் இசைக்கருவிகளின் பட்டியல்[தொகு]
“ |
விண்அதிர் இமிழ்இசைகடுப்ப,பண்அமைத்து திண்வார்விசித்த முழவொடு,ஆகுளி, நுண்உருக்குஉற்றவிளங்கு,அடர்ப்பாண்டில், மின் இரும் பீலி அணித் தழைக்கோட்டொடு ,கண்இடைவிடுத்தகளிற்றுஉயிர்த்தூம்பின் ,இளிப் பயிர் இமிரும்குறும்பரம் தூம்பொடு, விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ, நடுவுநின்று இசைக்கும் அரிக்குரல்தட்டை, கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி, நொடிதரு பாணிய பதலையும், பிறவும்,[1]. |
” |
என மலைபடுகடாம், இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.
………………………………..தொடரும்……………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக