சான்றோர் வாக்கு – 31. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS
திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவ
ரிருப்பிடம் என்றன் நூற்களின் இருப்பிடம்
அவரால் வெளிவந் துள்ள திரைப்படம்
என்நூற் சொல்லை மாற்றியது குறிப்பிடும்
பழியே தவர்மேல்? என்நூல் அல்லது
வழியே தவர்க்கு? கற்பனை ஏது?
கட்சித் தலைவர்தம் கட்சிக் குழந்தையின்
தொட்டில் ஆட்டப் பாடிய பாட்டும்
வளர்க்கப் பாடி வந்த பாட்டும்
என் பாட்டாகும் என் பாட்டுக்குப்
பின்பாட்டுப் பாடினோன் அதனைத் தன்பாட்டு
என்று இயம்பும்- இது குன்றின் விளக்காம்
எனினும்,
நாட்டுப் பற்றுள நல்லவர்
மிகப்பலர் என்றன் பாட்டின் மேன்மையை
உணர்ந்து சிலசொல் உரைத்த துண்டு
முட்டுக் கட்டை இட்டதில்லை
மற்றும்…
“Films by these
released
A diction re-hashed
from my works revealed
Not to be blamed are
they! What else can they do ?
Where else find do they the strength of imagination ?
Songs sung at
political parties newly sprung
Composed were they
after my poems
They who my poetry
aped,
Declared that their
very own it was
Like a lamp on a hill
seen
One can the truth
manifest see
Many good and
patriotic men
The excellence of my
verses extolled
And to my progress
did not put a block ---- R,Ganapathy.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக