--சிறுகதை
--- பணம் பதினொன்றும் செய்யும்
களப்பாள்
குமரன்.
சங்கரன்,
நேர்மையான ஆசிரியர்!
அவர் வாழ்நாள் முழுதும் அழுதே அழிய வேண்டும் என்று அவருக்கு வாழ்க்கைத்துணையாக
வந்து வாய்த்தவள்தான் குணவதி. இவளைக் குணவதி என்று சொல்வதைவிடப்
’ பணவதி ’ என்றுதான் சொல்ல வேண்டும். . சிறுவயதில் தந்தையை இழந்த இவளுக்கு
உற்றதுணை தாய்தான், மகளைப் படிக்கவைத்து, மணமுடித்து மகளின் வாழ்க்கைக்குத் துணையாக இருந்துவருகிறாள்.
குணவதி,
படித்துப் பட்டம்பெற்றுப் பணம்புரளும் அரசு வேலையைத் தேடி அலைந்து,
போட்டியில் முதலிடம் பிடிக்க முந்தானையை விரித்துப்போட்டுப் பத்திரப்
பதிவுத்துறையில் இடம்
பிடித்துவிட்டாள்.
”வணக்கம் மேடம்” என்று யாராவது சொன்னால் நூறு,
இருநூறு கொடுத்தால்தான் இவளும் வணக்கம் சொல்வாள்,
திருச்சி புறநகர் சார்பதிவாளர் குணவதிக்கு
‘வளர்ந்து பெரியவளாகிய மகள் நித்யா கல்லூரியில் பி.காம். படிக்கவும் ஏற்பாடாகிய நிலையில் வீடு தேடினாள்.
திருச்சியில் குணவதிக்கு வீடு பிடித்துக் கொடுத்த புரோக்கர் ஆதவன் குணவதிக்கும்
புரோக்கர் ஆனான். ஆதவனைக் கேட்காமல் எந்த ஒரு கோப்பிலும் குணவதி
கையெழுத்துப் போடமாட்டாள். அன்றைய வசூல் அனைத்தும் மாலை ஆறு மணிக்கெல்லாம் குணவதியின் கைக்கு வந்துசேரும்.
குணவதியின் வசூல் வேட்டை குறித்து பதிவுத்துறை இயக்குநருக்குப்
புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. குணவதி பணியிட மாற்றம் செய்யப்பட்டாள்.
குணவதி, ஆதவனோடு கலந்துரையாடி பதிவுத்துறை அமைச்சரைப்பார்த்து
மீண்டும் திருசிக்கு வர, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யக் களத்தில்
இறங்கினாள். ஆதவன் கட்சி மேலிடத்துடன் தொடர்புகொண்டு குணவதி வீட்டிற்கு
வந்தவன் இரவு வெகுநேரம் வரை அவள் அறையில் பேசிக்கொண்டிருந்தான்.
“ மேடம் நாளைக்கே பத்து லட்சம் பணம்
ஏற்பாடு செய்யுங்கள்…”
“ என்னா… பத்து லட்சமா…? ஆதவா…!
பொண்ணுக்குக் கார் வாங்கிக் கொடுக்கலாமுன்னு பத்து லட்சம் வச்சிருக்கேன்…”
“
மேடம்….! பாப்பாவுக்குத்தான் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்திருக்கீங்க…நீங்க திருச்சிக்குத் திரும்பி வரணும் அதுக்கப்புறம் காரு, பங்களா எல்லாம் வாங்கிடலாம்..”
” சரி…ஓகே…
! பாத்துக்கலாம். நாளக்கு எப்ப போகலாமுன்னு சொல்லு..”
“
சரி மேடம்….! நான் போன் பண்றேன்…”
தொகுதி
எம்.எல்.ஏ. கோரியபடி பத்து லட்சம் கொடுப்பதற்கு
ஒப்புக்கொண்டு எம்.எல். ஏ. தங்கும் விடுதிக்குப் பணத்தோடு புறப்பட்டாள். எம்.எல்.ஏ. இரவு பத்துமணிக்கு
வந்து சேர்ந்தார்.ஆதவன் ஏற்பாடு செய்த மது விருந்து நீண்டு மாது விருந்தாகியதால் களைத்துப்போன குணவதியைக் காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தான் ஆதவன்.
……………………………………..தொடரும்……………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக