செவ்வாய், 24 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –13.- தமிழர் இசைக்கருவிகள்

 

·         சங்கு- ஓர் ஆய்வு –13.- தமிழர் இசைக்கருவிகள் 

 

இறைவன் இன்றும் நம்முடன் இருக்கின்றான் என்பதற்கு இன்று நடந்த நிகழ்ச்சியே சாட்சி.திருக்கழுக்குன்றம்-சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் - செங்கல்பட்டிலிருந்து 14 கிலோ மீட்டடரிலும் - மகாபலிபுரம் -கல்பாக்கம் - திருப்போருர் - மதுராந்தகம் -மேல்மருவத்துர் -ஆகிய புகழ்பெற்ற ஊர்களிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஊருக்கு நடுவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குளம்-சங்கு தீர்த்த குளம் ஆகும்.

 


இதில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும். அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.இன்று காலையிலும் 9 மணிஅளவில் அதுபோல் சங்கு பிறந்தது. ஆயிரக்கனக்கான மக்கள் அதனை கண்டுகளித்தார்கள்.

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும்.அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்துள்ளார்கள்.

 

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான இதுதோன்றும்.இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.இன்றைய நிகழ்ச்சியை பற்றிய விரிவான வீடியோ தொகுப்பு விரைவில்.....

நன்றியுடன்
வாழ்க வளமுடன்.
வேலன்.

………………………………..தொடரும்……………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக