செவ்வாய், 31 மார்ச், 2026

தமிழமுது –251– தொல்தமிழர் இசை மரபு:111 ..ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)

 தமிழமுது –251– தொல்தமிழர் இசை மரபு:111 நீட்சியும் -  வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

                              மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 8. 

 

நாடகம் என்பது - தமிழ்ச்சொல்லே. நடித்தல் என்பது இன்னொருவனைப்போல் அல்லது இல்லாததை உள்ளது போலச் செய்து காட்டுதல்.  முத்தமிழ்  தொன்றுதொட்டு இயலிசை நாடகம்் என்றே வழங்கும். நாடகக்கலை கூத்து, நடனம், நாடகம் என முத்திறப்படும்.. 

 

           குதித்தாடுவது கூத்து,அது, வேத்தியல், பொதுவியல் உலகியல், தேவியல் ; வசைக்கூத்து, புகழ்க் கூத்து, வரிக்கூத்து, வரியமைதிக் கூத்து (வரிச்சாந்திக் கூத்து) அமைதிக் கூத்து (சாந்திக்கூத்து) வேடிக்கைக்கூத்து (விநோதக்கூத்து.) அகக் கூத்து, புறக் கூத்து, விளையாட்டுக் கூத்து, வினைக் கூத்து ; வெற்றிக் கூத்து, தோல்விக் கூத்து எனப் பல்வேறுவகையில் இவ்விருவகைப்படும்.  

            நடனம் அல்லது நடம் என்பது அழகுற ஆடுவது. அது 108 உடற்கரணங்களோடும் கை கால் கண் வாய் முதலிய உறுப்புகளின் தொழிகளோடும் கூடியது. கைவினைகள் எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என முத்திறப்பட்டு, பிண்டி அல்லது இணையா வினைக்கை யெனப்படு. ஒற்றைக்கை வண்ணம் முப்பத்துமூன்றும் பிணையல் அல்லது இணைக்கையெனப்படும் இரட்டைக்கை வண்ணம் பதினைந்தும் கொண்டதாகும்.  

                தமிழ் நடனம் இன்று பரதநாட்டியம் என்று வழங்குகின்றது. பரத சாத்திரம் வடமொழியில் இயற்றப்பட்டது. கி.மு.4ஆம் நூற்றாண்டாகும். அதற்கு முந்தியது தமிழ்ப் பரதமேயென்பதை “நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன.” என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரைப் பாயிறத்திற் கூறியிருப்பதால் அறிந்து கொள்க. . 

..........................தொடரும் ..........................