தமிழமுது –232– தொல்தமிழர் இசை மரபு:92.
பத்துப்பாட்டு:
7.நெடுநல் வாடை : வயிரிசையும் மயில் கூவலோசையும்
”நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறையக்
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் “ --95 – 100.
நிலவின் இனிய ஒளியை அரசன் நுகரும் நெடிய வெள்ளிய நிலா முற்றத்தில் உள்ள நீர் வந்து வீழும் மகர வாயாகப் பகுத்த வாயினையுடைய பந்தல் நிறைவதால் கலங்கி விழுகின்ற அருவியின் ஓசை மிகுந்து அதற்கு அயலிடத்தே தழைத்த நெடிய பீலி ஒதுங்க மெல்லிய இயல்பினையுடைய மயில், ஆரவாரிக்கும் கொம்பு என்று மருளும் இனிய ஓசை பெரிய மலையின் ஆரவாரம் போல ஆரவாரிக்கும் கோயில்.
அருவியும் மயிலும் மலைக்கு உரியனவாதால் ஒப்புமை ‘ புலம்புவிடுகுரல் மழை மெத்தென முழங்கினாற்போன்று இருத்தலின் ஒப்புமை கொண்டார். அஃதாவது அவற்றின் எதிரொலி எழுகின்ற கோயில் என்றும் கொள்க.
................................................தொடரும்...................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக