வியாழன், 19 மார்ச், 2026

தமிழமுது –240– தொல்தமிழர் இசை மரபு:100. ..தமிழிசை மருத்துவம்.

 தமிழமுது –240– தொல்தமிழர் இசை மரபு:100. 

           தமிழிசை மருத்துவ. 

 

                                       பத்துப்பாட்டு. 

 

10. மலைபடுகடாம்:   

கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்    

நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என   

அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்.” - 302 – 304.  

 தன் கணவர் மார்பில் புலி பாய்ந்தமையால் நெடிய பிளந்து காணப்படும் சீரிய புண்ணை ஆற்றுவதற்குக் காவலெனக் கருதி அறல் (குறுங்காடு)  போன்ற  கூந்தலையுடைய கொடிச்சியர் (குறிஞ்சி நிலப் பெண்டிர்பாடும் பாட்டால் எழும் ஓசையும்..  

          விளக்கம் : இலண்டன்பல்கலைக்கழகத் துணை வேந்தர் இசை மருத்துவம் குறித்த பல்கலைக்கழகப் பட்டத்திற்கக்குரிய பாடத் திட்டங்களை உருவாக்க முன்வந்துள்ளார்அவர் இசைஞர்களை இசை மருத்துவத்தில் ஈடுபடுத்துவதோடுமாணவர்களுக்குப் பயிற்சி அளித்து இசை மருத்துவர்களாக்கவும் முயன்றுள்ளார்மன அழுத்தம் மனப்பிறழ்ச்சிகற்றல் குறைபாடுகள்மனவளர்ச்சிக் குறைபாடு முதலியவற்றால் துன்புறும் மக்களைக் காப்பாற்ற இசை மருத்துவம் பேருதவிபுரியும் என்ற நோக்கில் இசை மருத்துவம் முன்னெடுக்கப்படுகின்றதுஇன்று அறிவியல் வயப்பட்ட இசை மருத்துவம் தொல்தமிழரின் அரிய கண்டுபிடிப்பன்றோ..!  

 MUSIC THAT HEALS – Times oIndia; 10 – 03 – 2014. Michael Thorne, Vice Chancellor, Anglia Ruskin University, UK. The master's in music therapy is a two –year full –time course that trains skilled musicians to become music therapists......”  

.........................................தொடரும்.......................................... 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக