புதன், 25 மார்ச், 2026

தமிழமுது –245– தொல்தமிழர் இசை மரபு:105 நீட்சியும் - வீழ்ச்சியும். மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 2.

 தமிழமுது –245– தொல்தமிழர் இசை மரபு:105 நீட்சியும் -  வீழ்ச்சியும்.  

                              மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 2. 

 

”இசைக்கருவிகள்:  

“இசைக்கருவிகள் தோல், துளை, நரம்பு, வெண்கலம், (கஞ்சம்) என நால்வகைப் பட்டிருந்தன. தோற்கருவிகள் ஆடல்முழா, பாடல் முழா,பொது முழா என்றும் ; அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு,  புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாள் முழவு, காலை முழவு என்றும் ; மணப்பறை, பிணப்பறை என்றும் வகுக்கப்பட்டிருந்தன. பறை என்பது தோற்கருவிப் பொதுப் பெயர். “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை ” (தொல்.964). 

 இன்னிசைத் துளைக்கருவிகள் புல்லாங்குழல் இசைக்குழல் (நாதசுரம்), முகவீணை என்னும் ஏழிசைக்  குழல்களகவும் ; இருவகைப்பட்டிருந்தன. தாரை, சின்னம், வாங்கா, கொம்பு சங்கு முதலிய ஓரிசைத் துளைக் கருவிகள், ஊர்வலம், போர் முதலிய நிகழ்ச்சிகளில் ஆரவார இசைக்கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. மகுடி என்பது பாம்பை மயக்குதற்கென்றே அமைக்கப்பட்ட ஏழிசைச் சிறப்பின்னிசைக் குழலாகும்.  

 

நரம்புக் கருவிகள் ஒரு நரம்புள்ள சுரையாழிலிருந்து ஆயிரம் நரம்புகள் பெருங்கலம் (ஆதி யாழ்) வரை பல்வேறுவகைப்பட்டிருந்தன. அவற்றுள் பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்னும் நான்கும் சிறந்தவை. அவற்றுள்ளும் தலைசிறந்தது செங்கோட்டியாழ். அதுவே பின்னர் வீணையாகத் திரிந்தது. ஆயிரம் நரம்பென்பது, ஆயிரங்காற் பூச்சி என்பதிற்போல், நரம்பின் பெருந்தொகையையே குறிக்கும்.. 

.......... தொடரும்.............................................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக