சனி, 31 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –305.

 

தன்னேரிலாத தமிழ் –305.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். –குறள்,28.

வள்ளுவன் சொல்லே வேதமாம்-ஞானி

வாழ்வினிலே கண்ட அனுபவமாம்பாரில் (வள்ளுவன்)

 

வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி

கொள்ளை கொண்ட குறளைக் கொண்டாடுவோமே (வள்ளுவன்)

 

செந்தமிழ்ச் செல்வம் இதுவே மேலாம்

சிந்தனையாலே சேர்ந்த செந்தேனாம்

உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம்

சொந்தத் திருக்குறளறம் ஒன்றேதான் பாரில். (வள்ளுவன்)

  ----கவிஞர் நாஞ்சில் நாடு ராஜப்பா, படம்: ஆத்ம சாந்தி........

 

வெள்ளி, 30 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –304.

 

தன்னேரிலாத தமிழ் –304.

 

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.-குறள்.—1077.

 

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்

இருக்கும் நிலை என்று மாறுமோ?

உழைப்பவர் வாழ்வே வீதியிலே

உறங்குவதோ நடைபாதையிலே

இரக்கங் காட்டத்தான் நாதியில்லேதினம் (சிரிப்பவர்)

 

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா

ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?

அழுபவர் சிரிக்கும் நாள்வருமா?-தினம் (சிரிப்பவர்)

 

உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை

உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை

உழைப்பவர் உயர்ந்தல் போதுமையாதினம் (சிரிப்பவர்)

  ---கவிஞர் அ. மருதகாசி, படம்: சபாஷ் மாப்பிள்ளே, 1961.


வியாழன், 29 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –303

 

தன்னேரிலாத தமிழ் –303.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு. –குறள்.336.

 

காடு முன்னினரே நாடு கொண்டோரும்

நினக்கும் வருதல் வைகல் அற்றே..” புறநானூறு:359.

 

சமரசம் உலாவும் இடமே

நம் வாழ்வில்காணா (சமரம்)

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர்

தீயோர் என்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடுங்காடு

தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு

உல்லினிலே இதுதான் (நம் வாழ்வில்)

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே?

அறிஞன் எங்கே அசடனும் எங்கே?

ஆவி போனபின் கூடுவார் இங்கே

ஆலையினாலே இதுதான் (நம் வாழ்வில்)

 

சேவை செய்யும் தியாகி சிங்கார போகி

ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி

எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே

உண்மையிலே இதுதான் (நம் வாழ்வில்)

---கவிஞர் அ. மருதகாசி, படம்: ரம்பையின் காதல், 1956.

 

புதன், 28 ஜூலை, 2021

 

களப்பாள்----- kalappal

Last 7 days

Views

6224

22 Jul23 Jul24 Jul25 Jul26 Jul27 Jul28 Jul050100150200

22 Jul 2021, 05:30:00

171

23 Jul 2021, 05:30:00

27

24 Jul 2021, 05:30:00

62

25 Jul 2021, 05:30:00

70

26 Jul 2021, 05:30:00

78

27 Jul 2021, 05:30:00

177

28 Jul 2021, 05:30:00

37

தன்னேரிலாத தமிழ் –302

 

தன்னேரிலாத தமிழ் –302.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல். –குறள்.158.

 

பணம் பந்தியிலே குணம் குப்பையிலேஇதை

பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே!

ஒண்ணும் தெரியா ஆளானாலும் பணமிருந்தாலேஅவனை

உயர்த்தி பேச மனிதர்கூட்டம் நாளும் தப்பாதே

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை- உலகம்

எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே (பணம்)

 

ஆளை ஆளு புகழ்வதெல்லாம்பணத்துக்காகத்தான்-பணம்

அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உன்னைத்தான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை- இதை

எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)

 

உன்னால் உயர்ந்த நிலையை அடைந்தோர்

நிறைய பேர்கள் உண்டுஅவர்கள்

உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார் கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு

நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு (பணம்)

----கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: பணம் பந்தியிலே, 1961.

செவ்வாய், 27 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –301.

 

தன்னேரிலாத தமிழ் –301.                                                           

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.-குறள்.69.

 

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்

பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்விபெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழச் செய்தாள்

அன்னையைப் போலொரு தெய்வமில்லைஅவள்

அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை (அன்னை)

 

துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டேநம்மை

சுகம் பெறச் செய்திடும் கருணை வெள்ளம் (அன்னை)

 

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்ஒரு

நாழிகை நம்பசி பொறுக்க மாட்டாள்

மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே

மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் (அன்னை)

--கவிஞர் கா,மு. ஷெரீப், படம்:அன்னையின் ஆணை,1958.

திங்கள், 26 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –300.

 

தன்னேரிலாத தமிழ் –300.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு. –குறள். 161.

 

வாழ்ந்தாலும் ஏசும்

தாழ்ந்தாலும் ஏசும்

வையகம் இதுதானடா (வாழ்ந்தாலும்)

 

வீழ்ந்தாரைக் கண்டால்

வாய்விட்டுச் சிரிக்கும்

வாழ்ந்தாரைக் கண்டால்

மனதுக்குள் வெறுக்கும்

 

இல்லாரைக் கண்டால்

ஏளனம் செய்யும்

இருப்பவன் கேட்டால்

நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும்)

 

பண்பாடு இன்றிப்

பாதகம் செய்யும்

பணத்தாலே யாவும்

மறைத்திட நினைக்கும்

 

குணத்தோடு வாழும்

குடும்பத்தை அழிக்கும்

குணம் மாறி நடந்தே

பகைமையை வளர்க்கும் (வாழ்ந்தாலும்)

--கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: நான் பெற்ற செல்வம், 1956.

 

 

ஞாயிறு, 25 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –299.

 

தன்னேரிலாத தமிழ் –299.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். –குறள்.66.

 

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்

தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்

 

நான் பெற்ற செல்வம்

 நலமான செல்வம்

தேன்மொழி பேசும்

 சிங்காரச் செல்வம்நீ (நான்)

 

தொட்டால் மணக்கும் ஜவ்வாது

சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு

எட்ட இருந்தே நினைத்தாலும்

இனிக்கும் மணக்கும் உன் உருவம்நீ (நான்)

 

அன்பே இல்லா மானிடரால்

அன்னையை இழந்தாய் இளம் வயதில்

பண்பே அறியாப் பாவியர்கள்

வாழுகின்ற பூமி இது நீ அறிவாய்- கண்ணே (நான்)

--கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: நான் பெற்ற செல்வம், 1956.

சனி, 24 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –298.

 

தன்னேரிலாத தமிழ் –298.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாம்கண்டது இல்.-குறள். 1071.

 

“அவன்: எல்லாரும் ஓரினம் எல்லாரும் ஓர்குலம்

எல்லாரும் ஒருதாயின் மக்கள் அன்றோ

எல்லாரும் வாழ்வதற்கே பிறந்தார்கள் என்ற நீதி

கொள்ளாமல் தாழ்வு செய்யும் கொடுமையைச் சகித்தல் நன்றோ

ஜாதிசமய பேதம் –மதவாதிகளின் வாதம்

இதற்காக எத்தனை வேதம்- புரியாத மன விரோதம் (ஜாதி)

 

அவள்: அடிமையென ஒரு ஜாதி ஆட்சி செய்ய ஒருஜாதி

கொள்ளை கொள்ள ஒருஜாதி சமுதாய உலகிலே

தீய உயர்வு தாழ்வு ஏனிந்த மோகம்?

மாய உலக வாழ்வு நிலையாது கொள் விவேகம்

 

இருவரும்: ஜாதி சமய பேதம் – மதவாதிகள் வாதம்!.

---கவிஞர் சுத்தானந்த பாரதியார், படம்: ஸ்ரீஆண்டாள், 1948.

வெள்ளி, 23 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –297.

 

தன்னேரிலாத தமிழ் –297.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது,-குறள். 45.

 

பெண்: இன்று நமதுள்ளமே-பொங்கும்

புது வெள்ளமே

இல்லற ஓடமிதே-இனி இன்பம்

ஏந்திச் செல்லுமே.

ஆண்: மங்கையர் குலமணியே

மஞ்சள் முகந்தனிலே

மகிழ்ச்சிகள் துள்ளுமே

வந்தென்னை அள்ளுமே.

பெண்: நேற்று நம்மைக் கண்ட நிலா

நெஞ்சுருகிச் சென்ற நிலா

வாழ்த்துகள் சொல்லுமே

மனந்தன்னைக் கிள்ளுமே

ஆண்: வள்ளுவன் வழியினிலே –இனி

வாழ்க்கை ரதம் செல்லுமே

பெண்: கண்களில் ஊறும் நீரும் –இனி

நம் நிலை காண நாணும் – சுகம்

கவிதை பாடிவரும்.

---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: தங்கப்பதுமை,1959.

வியாழன், 22 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –296.

 

தன்னேரிலாத தமிழ் –296.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர். –குறள்.620.

 

விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை

விளையாடக் கொடுத்துவிட்டாள்  இயற்கை அன்னை-அது

விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை

மேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே

மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு

வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே

எதிர்த்துவரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை

எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா.”

 -----கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: தங்கப்பதுமை, 1959.

செவ்வாய், 20 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –295

 

தன்னேரிலாத தமிழ் –295.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு. குறள். 752

 

காவேரி ஓரம் கவிசொன்ன காதல்

கதைசொல்லி நான் பாடவா உள்ளம்

அலைமோதும் நிலை கூறவாஅந்தக்

கனிவான பாடல் முடிவாகு முன்னே

கனவான கதை கூறவாபொங்கும்

விழி நீரை அணை போடவா (காவேரி)

 

பொருளோடு வாழ்வு உருவாகும் போது

புகழ் பாடப் பலர் கூடுவார்அந்த

புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை

மதியாமல் உரையாடுவார்ஏழை

விதியோடு விளையாடுவார்அன்பை

மலிவாக எடைபோடுவார் என்ற

கனிவான பாடல் முடிவாகு முன்னே

கனவான கதை கூறவாபொங்கும்

விழி நீரை அணை போடவா (காவேரி)

 

அழியாத காதல் நிலையானதென்றே

அழகான கவி பாடுவார் வாழ்வில்

வளமான மங்கை பொருளோடு வந்தால்

மனமாறி உறவாடுவார்- கொஞ்சும்

மொழி பேசி வலை வீசுவார்தன்னை

எளிதாக விலை பேசுவார் என்ற            

கனிவான பாடல் முடிவாகு முன்னே

கனவான கதை கூறவாபொங்கும்

விழி நீரை அணை போடவா

 

மண வாழ்வு மலராத மலராகுமா

மனதாசை விளையாத பயிராகுமா

உருவான உயர் அன்பு பறிபோகுமா

உயிர் வாழ்வு புவிமீது சுமையாகுமா, சுமையாகுமா?

---கவிஞர்கே.டி.சந்தானம், படம்: ஆடிப்பெருக்கு, 1962.

 

திங்கள், 19 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –294. -

 

தன்னேரிலாத தமிழ் –294.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல், குறள்.67.      

 

தந்தையைப் போல் உலகிலே

தெய்வமுண்டோ?ஒரு மகனுக்கு

சர்வமும் அவரென்றால் விந்தையுண்டோ (தந்தை)

 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஒளவையின் பொன்மொழி வீணா?

ஆண்டவன் போலே நீதியைப் புகன்றான்

அனுபவமே இதுதானா? (அன்னை)

 

உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி

என் வாழ்வில் இன்பமே எதிர்பார்த்த

தந்தை எங்கே...என் தந்தை எங்கே?

 

கண்ணிமை போலே என்னை வளர்த்தார்

கடமையை நான் மறவேனா?

காரிருள் போல பாழான சிதையில்

கனலானார் விதிதானாதந்தை

கனலானார் விதிதானா?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஒளவையின் பொன்மொழி வீணா....!

ஒளவையின் பொன்மொழி வீணா?

 ---கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், படம்: தாய்க்குப் பின் தாரம், 1956.

ஞாயிறு, 18 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –293

 

தன்னேரிலாத தமிழ் –293

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. குறள். 51.

 

பெண்ணின் பெருமையே பெருமைஅன்பின்

தன்மையும் தாய்மையும் தழைத்திடும்அருமை (பெண்ணின்)

 

உண்ணதமாகிய கனவே நினைவாக

உருவாக்கியே வாழ வழிகாட்டிடும் தெய்வம் (பெண்ணின்)

 

அன்பும் குணமும் உயர்ந்த அறிவும் இருக்கும்போது

அழகில்லை என்றால் அதனால் குறையேது?

பண்பும் நற்குடிப் பிறப்பும் மிகநிறைந்து

பதிவாழ்வையே தனது நிதியாகக் கருதும்உத்தமப் (பெண்ணின்)

----கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி, படம்: பதியே தெய்வம், 1956.

சனி, 17 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –292

 

தன்னேரிலாத தமிழ் –292

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வானின்று அமையாது ஒழுக்கு, குறள். 20.

 

அன்னையின் அருளே வா! வா!

ஆடிப் பெருக்கே வா! வா!

பொங்கும் பாலே வா! வா! (அன்னையின்)

குடகில் ஊற்றுக் கண்ணாகி

குலத்தைக் காக்கும் பெண்ணாகி

கண்ணன்பாடி அணை தாண்டி

கார்முகில் கண்ணனை வலம்வந்து (அன்னையின்)

 திருவாய்மொழியாம் நாலாயிரமும்

தேனாய்ப் பெருகும் தமிழே வா!

திருமால் தனக்கே மாலையாகி

திவரங்கம்தனை வலம்வரும் தாயே!

கட்டிக்கரும்பின் சுவையும் நீயே!

கமபன் கவிதை நயமும் நீ

முத்துத் தாண்டவர் பாடலிலே

முழங்கும் பக்திப் பெருக்கும் நீ

 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா

வற்றாக் கருணை காவேரி

வளநாடாக்கும் தாயே நீ

வாழிய வாழிய பல்லாண்டு!.

--             ---கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, படம்: ஆடிப்பெருக்கு, 1962.

வியாழன், 15 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் – 291

 

தன்னேரிலாத தமிழ் – 291

 தாயே... தமிழே...!

தாயே உன் செயலல்லவோதமிழ்த்

தாயே உன் செயலல்லவோ இன்பத்

தாலாட்டி அறிவென்ற பாலூட்டும்செந்தமிழ்த்

தாயே உன் செயலல்லவோ?

 

நீயே என் கலைவானிலே- மின்னும்

நிதியான மதியல்லவோகவி

நினைவோடு விளையாடும் திருவே

உனை மறவேன் இனி- செந்தமிழ்த்

தாயே உன் செய்லல்லவோ?

 

இயல் இசை முறையோடு எழில் மேவும் ராணி

இலக்கியச் சுவையோடு இணைந்தாடும் வாணி

உயிருடன் மெய்யோடு ஓங்காரமே

உன் மொழியில் உலவும் ரீங்காரமே

 

உலகம் போற்றும் அமுதவாரி உனதிரு

மலர்ப் பாதமே மறவேன் இனி செந்தமிழ்த்

தாயே உன் செயலல்லவோ?

  -----கவிஞர் ராமையாதாஸ்,படம்: இரு சகோதரிகள், 1957.

புதன், 14 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –290

 

தன்னேரிலாத தமிழ் –290

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகுஇயற்றி யான்.-குறள்.1062.

 

அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே

அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே

ஆண்டவன் எங்களை மறந்தது போலே

அன்னை நீர் மறவாதீர்

வேண்டிய தெல்லாம் ஒரு பிடி சோறு

வெறுஞ் சோறாயினும் போதும் (அம்மா)

 

உச்சி வெய்யிலில் பிச்சை எடுக்கும்

பச்சைக் குழந்தைகள் பாரும்

ஒருபிடி சாதம் ஒருபிடி அரிசி

ஒரு முழக் கந்தை தாரும் (அம்மா)

 

பாலும் பழமும் வேண்டாந் தாயே

பசிக்கு சோறு கிடைத்தால் போதும்

பிள்ளை குட்டியைப் பெற்ற தாய்களே

பிச்சைப் போட்டுப் பசிதீரும்உங்கள்

பிள்ளைகளாய் எண்ணிப்பாரும்.

    --கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, படம்: சம்சாரம், 1951.

செவ்வாய், 13 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –289.

 

 தன்னேரிலாத தமிழ் –289.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு. குறள். 752.

பொருளே இல்லார்க்குத் தொல்லைய?

புது வாழ்வே இல்லையா?

இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா

இறைவா நீ சொல்லையா –(பொருளே)

பசியாலே வாடும் பாவி முகத்தைப்

பார்ப்போர் இல்லையா?

எமைக் காப்போர் இல்லையா?

ஏழை எம்மை ஆதரிக்கும் இரக்கம் இல்லையா?

இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா?

இறைவா நீ சொல்லையா..!(பொருளே)

 

வறுமைப் பேயை விரட்ட நாட்டில்

வழியே இல்லையாஅதற்கு

அழிவே இல்லையா?

 

பொருளில்லாதார் இல்லையென்னும்உலகில்

பொருளில்லாதார் இல்லையென்னும்

திரு நாளே இல்லையா?

இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா?

இறைவா நீ சொல்லையா..! (பொருளே)

---கவிஞர் கே.பி. காமாட்சி, படம்: பராசக்தி, 1952.