தன்னேரிலாத தமிழ் –302.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல். –குறள்.158.
“பணம்
பந்தியிலே குணம் குப்பையிலே –இதை
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே!
ஒண்ணும் தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே –அவனை
உயர்த்தி பேச மனிதர்கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை- உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே (பணம்)
ஆளை ஆளு புகழ்வதெல்லாம்பணத்துக்காகத்தான்-பணம்
அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உன்னைத்தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை- இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)
உன்னால் உயர்ந்த நிலையை அடைந்தோர்
நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு (பணம்)
----கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: பணம் பந்தியிலே, 1961.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக