தன்னேரிலாத தமிழ் –297.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது,-குறள். 45.
பெண்:
இன்று நமதுள்ளமே-பொங்கும்
புது வெள்ளமே
இல்லற ஓடமிதே-இனி இன்பம்
ஏந்திச் செல்லுமே.
ஆண்:
மங்கையர் குலமணியே
மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே
வந்தென்னை அள்ளுமே.
பெண்:
நேற்று நம்மைக் கண்ட நிலா
நெஞ்சுருகிச் சென்ற நிலா
வாழ்த்துகள் சொல்லுமே
மனந்தன்னைக் கிள்ளுமே
ஆண்:
வள்ளுவன் வழியினிலே –இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே
பெண்:
கண்களில் ஊறும் நீரும் –இனி
நம் நிலை காண நாணும் – சுகம்
கவிதை பாடிவரும்.
---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: தங்கப்பதுமை,1959.
அன்பையும் அறனையும் உள்ளத்தில் ஏந்தியொழுகும் ஒரு இணையின் இருகுரலிசை ! பட்டுக்கோட்டையாரின் கருத்தான வரிகளின் இனிமையில் மனதைப் பறிகொடுத்த எத்துணையோ மாந்தர்களில் என் பெயரும் இடம் பெற்றிருப்பது தமிழுக்கே உரிய இனிமையாலன்றோ !
பதிலளிநீக்கு