தன்னேரிலாத தமிழ் – 282
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற
நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுநீதி ஒருகுலத்துக் கொருநீதி” –மனோன்மணியம்
சுந்தரனார்.
”வள்ளுவன்
சொல்லே வேதமாம் –ஞானி
வாழ்வினிலே கண்ட அனுபவமாம் – பாரில் (வள்ளுவன்)
வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி
கொள்ளை கொண்ட குறளைக் கொண்டாடுவோமே (வள்ளுவன்)
செந்தமிழ்ச் செல்வம் இதுவே –மேலாம்
சிந்தனையாலே சேர்ந்த செந்தேனாம்
உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம்
சொந்தத் திருக்குறளறம் ஒன்றேதான் பாரில் (வள்ளுவன்)
---கவிஞர் நாஞ்சில் நாடு ராஜப்பா,படம்: ஆத்மசாந்தி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக