சனி, 17 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –292

 

தன்னேரிலாத தமிழ் –292

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வானின்று அமையாது ஒழுக்கு, குறள். 20.

 

அன்னையின் அருளே வா! வா!

ஆடிப் பெருக்கே வா! வா!

பொங்கும் பாலே வா! வா! (அன்னையின்)

குடகில் ஊற்றுக் கண்ணாகி

குலத்தைக் காக்கும் பெண்ணாகி

கண்ணன்பாடி அணை தாண்டி

கார்முகில் கண்ணனை வலம்வந்து (அன்னையின்)

 திருவாய்மொழியாம் நாலாயிரமும்

தேனாய்ப் பெருகும் தமிழே வா!

திருமால் தனக்கே மாலையாகி

திவரங்கம்தனை வலம்வரும் தாயே!

கட்டிக்கரும்பின் சுவையும் நீயே!

கமபன் கவிதை நயமும் நீ

முத்துத் தாண்டவர் பாடலிலே

முழங்கும் பக்திப் பெருக்கும் நீ

 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா

வற்றாக் கருணை காவேரி

வளநாடாக்கும் தாயே நீ

வாழிய வாழிய பல்லாண்டு!.

--             ---கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, படம்: ஆடிப்பெருக்கு, 1962.

2 கருத்துகள்:

  1. கும்பகோணத்தில் இளம் வயதில் சப்பர ஊர்வலத்தோடு காவிரிக்குச் சென்று ஆடிப்பெருக்கினைக் கொண்டாடிய நாள்கள் நினைவிற்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  2. ஐயா, இளமைக் கால நினைவுகள் என்றும் இனிமையே....!

    பதிலளிநீக்கு