செவ்வாய், 27 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –301.

 

தன்னேரிலாத தமிழ் –301.                                                           

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.-குறள்.69.

 

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்

பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்விபெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழச் செய்தாள்

அன்னையைப் போலொரு தெய்வமில்லைஅவள்

அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை (அன்னை)

 

துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டேநம்மை

சுகம் பெறச் செய்திடும் கருணை வெள்ளம் (அன்னை)

 

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்ஒரு

நாழிகை நம்பசி பொறுக்க மாட்டாள்

மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே

மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் (அன்னை)

--கவிஞர் கா,மு. ஷெரீப், படம்:அன்னையின் ஆணை,1958.

3 கருத்துகள்:

  1. வள்ளுவரின் குறளமுதையும் பதிவிட்டு அதற்குப் பொருத்தமான திரைப்படப் பாடலொன்றையும் இணைத்து, தன்னேரிலாத தமிழ்ப் பதிவைச் செய்திருக்கும் தங்களுக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பதிவுகளைத் தாங்கள் விரும்பினால், தமிழ்ப் பணி மன்றத்திலும், செய்யலாம், அதை நான் முழு மனதுடன் வரவேற்பேன். பதிவின் இறுதியில் “இது போன்ற கூடுதல் பதிவுகளுக்கு ’களப்பால்”
    ‘ வலைப்பூவைக் காண்க ! என்ற குறிப்பையும் (வலைப்பூ இணைய முகவரியுடன்) இணைக்கலாம் !

    பதிலளிநீக்கு
  2. ஐயா, அப்படியே செய்கிறேன் ...நன்றியுடன்...!

    பதிலளிநீக்கு
  3. கருத்தாழம் மிக்க திருக்குறள்; அந்தக் கருத்துக்கு மெருகூட்டும் வகையில் கவி. கா.மு செரீப் அவர்களின் பாடல். அருமை ! அருமை ! தமிழ்ப் பணி மன்றம் பக்கம் வாருங்கள் !

    பதிலளிநீக்கு