புதன், 14 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –290

 

தன்னேரிலாத தமிழ் –290

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகுஇயற்றி யான்.-குறள்.1062.

 

அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே

அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே

ஆண்டவன் எங்களை மறந்தது போலே

அன்னை நீர் மறவாதீர்

வேண்டிய தெல்லாம் ஒரு பிடி சோறு

வெறுஞ் சோறாயினும் போதும் (அம்மா)

 

உச்சி வெய்யிலில் பிச்சை எடுக்கும்

பச்சைக் குழந்தைகள் பாரும்

ஒருபிடி சாதம் ஒருபிடி அரிசி

ஒரு முழக் கந்தை தாரும் (அம்மா)

 

பாலும் பழமும் வேண்டாந் தாயே

பசிக்கு சோறு கிடைத்தால் போதும்

பிள்ளை குட்டியைப் பெற்ற தாய்களே

பிச்சைப் போட்டுப் பசிதீரும்உங்கள்

பிள்ளைகளாய் எண்ணிப்பாரும்.

    --கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, படம்: சம்சாரம், 1951.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக