தன்னேரிலாத தமிழ் –304.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.-குறள்.—1077.
“சிரிப்பவர்
சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
உழைப்பவர் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
இரக்கங் காட்டத்தான் நாதியில்லே – தினம் (சிரிப்பவர்)
இருப்பவர் உள்ளம் திறந்திடுமா
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?
அழுபவர் சிரிக்கும் நாள்வருமா?-தினம் (சிரிப்பவர்)
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தல் போதுமையா –தினம் (சிரிப்பவர்)
---கவிஞர்
அ. மருதகாசி, படம்: சபாஷ் மாப்பிள்ளே, 1961.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக