ஞாயிறு, 4 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் - 281.

 

 

தன்னேரிலாத தமிழ் - 281

செவிக்குணவு இலாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்.412.


வண்ணத்தமிழ் சொர்னக்கிளி

வாய் திறந்தாள்               

வள்ளுவன் சொல் தெள்ளமுதை

மெல்ல மொழிந்தாள் (வண்ண)

கன்னலொடு பாகுமலர்க்

கள்ளை வெறுத்தேன்அவள்

கானரசத் தேனையுண்டு இன்ப ( வண்ண)

மன்னும் செவிக்குணவு இல்லாதபோதுசிறிது

வயிற்றுக்கும் ஈயப்படும் எனவோதும்

பொன்னெழுத்து ஏடுதன்னை புவிமீது கொண்ட

கன்னியெழில் மாறாத கலைமாது எங்கள் ( வண்ண)


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.” –குறள்.66.


குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொல் காளாதவர்என்றே

அமிழ்தினும் இனியதொரு புகழ்சால்பொன்மொழியை

வழங்கி வற்றாத வளம் பெற்றாள்எங்கள் (வண்ணா)

    -கவிஞர் உடுமலை நாராயண கவி,  படம்: காவேரியின் கணவன், 1959.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக