ஞாயிறு, 25 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –299.

 

தன்னேரிலாத தமிழ் –299.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். –குறள்.66.

 

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்

தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்

 

நான் பெற்ற செல்வம்

 நலமான செல்வம்

தேன்மொழி பேசும்

 சிங்காரச் செல்வம்நீ (நான்)

 

தொட்டால் மணக்கும் ஜவ்வாது

சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு

எட்ட இருந்தே நினைத்தாலும்

இனிக்கும் மணக்கும் உன் உருவம்நீ (நான்)

 

அன்பே இல்லா மானிடரால்

அன்னையை இழந்தாய் இளம் வயதில்

பண்பே அறியாப் பாவியர்கள்

வாழுகின்ற பூமி இது நீ அறிவாய்- கண்ணே (நான்)

--கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: நான் பெற்ற செல்வம், 1956.

3 கருத்துகள்:

  1. நன்றி நண்பரே, தொடர்ந்து படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. குறளின் கருத்தைத் தூக்கிப் பிடிக்கும் இனிய இசைப்பாடல் ! கால வெள்ளத்தில் கரைந்து போகாத கனித் தமிழ்ப் பாடல் ! பதிவுக்குப் பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு