தன்னேரிலாத தமிழ் – 291
தாயே... தமிழே...!
தாயே உன் செயலல்லவோ – தமிழ்த்
தாயே உன் செயலல்லவோ இன்பத்
தாலாட்டி அறிவென்ற பாலூட்டும் – செந்தமிழ்த்
தாயே உன் செயலல்லவோ?
நீயே என் கலைவானிலே- மின்னும்
நிதியான மதியல்லவோ – கவி
நினைவோடு விளையாடும் திருவே
உனை மறவேன் இனி- செந்தமிழ்த்
தாயே உன் செய்லல்லவோ?
இயல் இசை முறையோடு எழில் மேவும் ராணி
இலக்கியச் சுவையோடு இணைந்தாடும் வாணி
உயிருடன் மெய்யோடு ஓங்காரமே
உன் மொழியில் உலவும் ரீங்காரமே
உலகம் போற்றும் அமுதவாரி உனதிரு
மலர்ப் பாதமே மறவேன் இனி –செந்தமிழ்த்
தாயே உன் செயலல்லவோ?
-----கவிஞர் ராமையாதாஸ்,படம்: இரு சகோதரிகள், 1957.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக