தன்னேரிலாத தமிழ் –286.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. குறள்.1032.
“நமதே தானிப்பூமி – நமதே தானே
உழவருக்கு இப்பூமி – உண்மைதானே
வெயில்மழை பார்க்காமே – பண்படுத்தோணும்
உழுது பயிர் செய்யோணும்
ஆடை ஆகாரங்குறைய அகற்றிப் போடணும்
பஞ்சம் பறந்து ஓடணும்
கூட்டுறவு விவசாயம் தான் நடத்தோணும்
நாட்டினிலே சமதர்மம் நிலை நாட்டணும்
அல்லல் பசி பிணி தீர்க்கும் – கற்பகத் தருவே உழவன்
கள்ளம் கபடம் தெரியா-கர்மயோகி உழவன்
உழவனே தேசத்தின் –உயிர்நாடியே
ராமராஜ்யம் என்றாலே –உழவர் ராஜ்யம் தானே
நமதே தானிப்பூமி நமதே தானே.”
-கவிஞர் லட்சுமணதாஸ்,
படம்: ஏழை உழவன்,1952.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக