சனி, 24 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –298.

 

தன்னேரிலாத தமிழ் –298.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாம்கண்டது இல்.-குறள். 1071.

 

“அவன்: எல்லாரும் ஓரினம் எல்லாரும் ஓர்குலம்

எல்லாரும் ஒருதாயின் மக்கள் அன்றோ

எல்லாரும் வாழ்வதற்கே பிறந்தார்கள் என்ற நீதி

கொள்ளாமல் தாழ்வு செய்யும் கொடுமையைச் சகித்தல் நன்றோ

ஜாதிசமய பேதம் –மதவாதிகளின் வாதம்

இதற்காக எத்தனை வேதம்- புரியாத மன விரோதம் (ஜாதி)

 

அவள்: அடிமையென ஒரு ஜாதி ஆட்சி செய்ய ஒருஜாதி

கொள்ளை கொள்ள ஒருஜாதி சமுதாய உலகிலே

தீய உயர்வு தாழ்வு ஏனிந்த மோகம்?

மாய உலக வாழ்வு நிலையாது கொள் விவேகம்

 

இருவரும்: ஜாதி சமய பேதம் – மதவாதிகள் வாதம்!.

---கவிஞர் சுத்தானந்த பாரதியார், படம்: ஸ்ரீஆண்டாள், 1948.

1 கருத்து:

  1. சுத்தானந்த பாரதியாரின் வரிகளில் திரைப்படப் பாடல் ! எனக்கு இது புதிய செய்தி ! வாழ்க தங்கள் நினைவாற்றல் !

    பதிலளிநீக்கு