தன்னேரிலாத தமிழ் –300.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. –குறள். 161.
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா (வாழ்ந்தாலும்)
வீழ்ந்தாரைக் கண்டால்
வாய்விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால்
மனதுக்குள் வெறுக்கும்
இல்லாரைக் கண்டால்
ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால்
நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும்)
பண்பாடு இன்றிப்
பாதகம் செய்யும்
பணத்தாலே யாவும்
மறைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும்
குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே
பகைமையை வளர்க்கும் (வாழ்ந்தாலும்)
--கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: நான் பெற்ற செல்வம், 1956.
திருக்கோயில் கல்வெட்டுகளைப் போல மனதில் பதிந்து அழியா இடம் பிடித்துள்ள இனிய பாடல். வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் ! எத்துணை மெய்ப்பொருள் சார்ந்த இனிய பாடல் !
பதிலளிநீக்கு