தன்னேரிலாத தமிழ் –294.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல், குறள்.67.
“தந்தையைப் போல் உலகிலே
தெய்வமுண்டோ?ஒரு மகனுக்கு
சர்வமும் அவரென்றால் விந்தையுண்டோ (தந்தை)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா?
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றான்
அனுபவமே இதுதானா? (அன்னை)
உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி
என் வாழ்வில் இன்பமே எதிர்பார்த்த
தந்தை எங்கே...என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா?
காரிருள் போல பாழான சிதையில்
கனலானார் விதிதானா –தந்தை
கனலானார் விதிதானா?
அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா....!
ஒளவையின் பொன்மொழி வீணா?
---கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், படம்: தாய்க்குப் பின் தாரம், 1956.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக