சனி, 3 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –280

 

தன்னேரிலாத தமிழ் –280


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர். -1033.


”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல்பவர் என்றேசொல்லும்

பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி

வழிசென்று மாண்பாலுயர்ந்த நாடு

நமது தாய் நாடு

நாட்டுக்குப்  பொருத்தம் நாமே நடத்தும்

கூட்டுப் பண்ணை விவசாயம்பட்ட

பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் உண்டு

பழைய கொள்கைகளை விடுவது ஞாயம் (நாட்டுக்கு)

காட்டையும் மேட்டையும் தோட்டங் கொடிகள்

கழனிகள் செய்வது திறமைஅதனால்  

கட்டாயம் நீங்கும் வறுமைஒளவை

பாட்டியும் பாட்டால் பாடிய பெருமை

பாராட்டிய தொழில் முறைமைஇது

பரம்பரையாய் நமக்குரிமைதமிழ் (நாட்டுக்கு)

ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில்

உழுது பாடுபட முடியாதுஒரு

பத்துக் குடித்தனம் நூறு காணியில்

பாங்காய் உழுவதுதான் தோது.””

    -கவிஞர் உடுமலை நாராயண கவி,  படம்: எங்க வீட்டு மகாலட்சுமி, 1957.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக