திங்கள், 9 அக்டோபர், 2023

 

--சிறுகதை --- பணம் பதினொன்றும் செய்யும்-3

                                     நித்யா, வழக்கம்போல் வார இறுதிநாள் விருந்தில் கலந்துகொண்டு முக்கால் போதையில் முகமெல்லாம் வியர்க்க, விழிகள் இரண்டு சிவந்து கனலைக் கக்க, தட்டுத்தடுமாறி ஸ்கூட்டரில் ஏறிஅமர்ந்து பட்டனை அழுத்த,  அது றெக்கைகட்டி பறக்க சாலையின் எதிரே வந்த காரின் மீது  பயங்கரமாக  மோதியது. , தூக்கி வீசப்பட்ட நித்யா சாலையின் நடு தடுப்புக்கட்டையில் விழுந்து அசையாமல் கிடந்தாள். காவல்துறையினர் அவளை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு  வீட்டிற்குத் தகவல் கொடுத்தனர்.

 

 அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவந்த குணவதி , தீவிர மருத்துவ அறையில் கிடந்த மகளைக் கண்னாடி வழியாகப் பார்த்தாள். நிலை தடுமாறிய குணவதியைப் பக்கத்தில் நின்றவர்கள் தாங்கிப்பிடித்து  உட்காரவைத்தனர்.

 

வெளியில் வந்த மருத்துவரைக் கண்ட குணவதி….

சார், எம்  பொண்ணு எப்படி இருக்கா..?

 

அம்மா..பதறாதீங்க, ஒங்க பொண்ணுக்கு இடுப்புல பலமான அடி பட்டிருக்கு கால்களை அசைக்க முடியவில்லை, முதுகுத்தண்டுவடத்தில் அடிபட்டிருக்கலாம் எதற்கும் டெஸ்டு எடுத்துப் பார்த்துதான் எதையும் சொல்ல முடியும்…” என்றார்.

முதுகுத் தண்டுவடம் பிசகி இருப்பதாகவும் உடனடியாக  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறமகளைத் தனியார் மருத்துவ மனையில் சேர்த்து மருத்துவம் பார்க்க முடிவு செய்த குணவதி வீட்டில் இருந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு  தனியார் மருத்து மனையில் மகளைச்சேர்த்தாள். படுத்த படுக்கையாகிவிட்ட மகளுக்கு அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்தது.நித்யாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை மாறாக அவளின் இரண்டு கால்களுக் மரத்து உணர்ச்சியற்றது போல இருந்தன.ஆனாலும் மருத்துவமனை செலவு மட்டும் குறையவே இல்லை. விற்கக்கூடாதவற்றையெல்லாம் விற்றும் பணம் போதவில்லை.

 

 இன்று தாலிக்கொடியை விற்று  மகளைக் காப்பாற்ற முடிவு செய்தாள் குணவதி, கணவனே கண்காணாத தெய்வமாகி அவள் தாலியை வாங்கிச் சென்றுவிட்டானோ…?பணம் பத்தும் செய்யும் என்பர், அது செய்யும் பதினொன்றுதான் தீர்ப்பு.”

……………………………………………………………………………………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக