தாய்மொழி வழிக் கல்வி-7
ஆங்கிலக் கல்வியால் பெருகும் அறியாமையை
நினைந்து ......
மகாகவி பாரதியார் (1882 – 1921)
“சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில்
இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன.
இவற்றுள் லட்சக்கணக்கான கோடிக் கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள்
மூட பக்திகளை எல்லாம் விட்டு விலகி இருக்கிறார்களா..?
இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்குப் போய்
தேறினவர்களிடம் மனசாட்சிப் படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும்
நடக்கும் யோக்கிதை மிகமிகக் குறைவாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாகவே கற்றுக்கொடுக்க
வேண்டுமென்ற கொள்கையை அனுசரணைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை.
கல்வி போதிப்பதற்கு ஒருவனது தாய் பாஷை
மட்டுமே இயற்கையானதும் மனிதப் பண்பிற்கு ஏற்றதுமான போதனா பாஷையாகும் என்பதே நமது முக்கிய
வாதமாகும்……….. தமிழ் தேசத்தைப் பொறுத்த மட்டில் அன்னிய பாஷையைப் பாட போதனைக்கு ப்
பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும்.ஏனெனில்
சரியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் சொல்வதற்குத் தமிழ் பாஷை இங்கிலீஷ் பாஷையை விடப் பலமடங்கு
உயர்ந்ததாகும்…..” .
(இரெ.குமரன், உயிருக்குநேர்
2010, கட்டுரைச் சுருக்கம்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக