செவ்வாய், 4 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 12 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 12 - பேராசிரியர் சி. இலக்குவனார்

1.  திருக்குறளில் கூறியுள்ளவாறே வாழ்வோம் என்று நாள்தோறும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு வள்ளுவர் நெறியில் வாழ்தல் வேண்டும்.

2.  எந்த நிகழ்ச்சியைத் தொடங்கினாலும் கல்வி நிலையங்களிலும் பொதுவிடங்களிலும் வள்ளுவருக்கு வணக்கம் கூறி வள்ளுவர் நெறியில் வாழ்வோம் என்று உறுதி கூறித் தொடங்குதல் வேண்டும்.

3.  திருவள்ளுவர் பெயரால் அறப்பணிக்குழு ஒன்றை அமைத்து வையகமெங்கும் தமிழர் நெறியைப் பரப்ப தமிழக அரசு ஆவன செய்தல் வேண்டும்.

4.  திருக்குறளில் புலமை பெற்றுள்ள அறிஞர்கட்குப் பட்டங்களும் பரிசுகளும் வழங்குதல் வேண்டும்.

5.  தமிழ்க் கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை ஆய்வதற்கும் பரப்புவதற்கும் திருவள்ளுவர் பெயரால் பல்கலைக் கழகம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.

6.  வள்ளுவர் நெறியை வையகமெங்கும் பரப்பத்தக்க தமிழக அறிஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் திருவள்ளுவர் பெயரால் தமிழ் ஆறாய்ச்சித் துறைகள் அமைக்க வேண்டும்.

7.  திரைப்படங்கள் தொடக்கத்தில் திருவள்ளுவர் படத்தையும் சில் குறட்பாக்களையும் காண்பித்தல் வேண்டும். கதை நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பரப்புதல் வேண்டும்.


இவ்வாறு திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடி மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த பசி, பிணி, பகை நீங்கி எல்லாரும் இன்புற்றிருக்கும் நிலையைத் தோற்றுவிப்போமாக.  ---இலக்குவனார் இதழுரைகள்.----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக