பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல்
- 11
இமையைத் தீய்க்கும் கண்ணீர்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
காமம்
சேர்குளத்தார், குறுந்.4 :1, 2
பிரிவாற்றாமையால் வரும் கண்ணீராதலால் வெம்மையுடையதாகக்
கூறப்பட்டது.
துன்பத்தில்விடும் கண்ணீர் சூடாக இருக்குமா ? கண்ணீரின்
தன்மை குறித்து அறிவியல் கூறுவது யாது ?
கண்ணீர்-வெம்மை
மார்புதலைக் கொண்ட மாணிழை மகளிர்
கவலே முற்ற வெய்துவீ ழரிப்பனி
கொற்றனார், நற். 30 : 5, 6
பரத்தையர் பலரும் நீ பிரிந்ததால் கவலையுற்று கண்களினின்று வெப்பமாய்
வடிகின்ற கண்ணீருடனே……
துன்பத்திலும் இன்பத்திலும்
வெளிவரும் கண்ணீரின் தன்மை …
why do we sometimes cry hot tears and other times cold tears
Date: Tue Feb 17 22:25:09 2004
Posted by milly
Grade level: undergrad School: northlake college
City: irving State/Province: tx Country: usa
Area of science: Medicine
ID: 1077078309.Me
Posted by milly
Grade level: undergrad School: northlake college
City: irving State/Province: tx Country: usa
Area of science: Medicine
ID: 1077078309.Me
Psychological conditions (suppose when you are
scared or feeling very
deep emotions like loss of some body you loved
dearly, then hot tears come
out. It is interesting to note here that crying
due to emotions is only
found in humans, though many believe that dogs,
wolves and other animals
also cry due to emotions but no specific proof
has been found yet).
மனத்தில் தோன்றும் மிக ஆழமான
உணர்ச்சி வெளிப்பாடுகளின் ( அன்புக்குரியோரின் இழப்பு முதலிய காரணிகள்) போது வெளிவரும்
கண்ணீர் வெம்மை உடையதாக இருக்கும் என்று அறிவியல் ஆய்வின்வழி அறியமுடிகிறது. மனம் இறுக்கமற்ற
நிலையில் வெளிப்படும் கண்ணீர், இயல்பானதாக, வெம்மையற்று வெளிப்படும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர், உடல் இயங்கியல் சார்ந்த அறிவியல் அறிவுடைய சங்கச் சான்றோர்தம் அறிவு நுட்பத்தை இன்றைய அறிவியல் ஏற்று வழிமொழிகிறதே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக