திருக்குறள்
– சிறப்புரை : 308
சினமும்
குணமும்
இணரெரி
தோய்தலன்ன இன்னா செயினும்
புணரின்
வெகுளாமை நன்று. – 308
பல
சுடர்களை உடைய பெரும் நெருப்பு, தன்னைத்
தழுவித்
தீய்த்தலை ஒத்த துன்பத்தை ஒருவன் செய்யினும் அவனிடத்து இயன்றவரை சினம் கொள்ளாமல் இருப்பது
நல்லது.
சினம்
என்னும் நெருப்பில் மூழ்காது – குணம் என்னும் குளத்தில் மூழ்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக