குறுந்தொகை
அரிய செய்திகள் – ஆய்வுக்குரிய செய்திகள்
பழந்தமிழ் நூல்களில் ஆய்வுக்குரிய செய்திகள் ஈண்டுத் தொகுத்துத்
தரப்படுகின்றன
புலவர்களின் அறிவியல் சிந்தனைகளை ஆராய்தல்
பாடுபொருள் - புலவரின் நிலவியல் சார்ந்த தொடர்புகள்
.வரலாற்றுச் செய்திகளை
அறிய திரட்ட வேண்டிய
சான்றுகள்.
புலவர் பெயராய்வு
, ஊர்ப் பெயராய்வு
– ஆய்வுகளைத் தொகுத்து
ஆராய்தல்
பாடுபொருளுக்குப் புறம்பாகப்
பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளின் நோக்கங்களை ஆராய்தல்
பழந்தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்குரிய செய்திகள்
பிறமொழிச் செவ்வியலக்கியங்களில் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்தல்
இத்தலைப்புகள் தொடர்பாக
இதற்கு முன்னர்
நிகழ்ந்துள்ள ஆய்வுகளை
கருத்தில்கொண்டு மேலாய்வு
நிகழ்த்துதல்
குறுந்தொகை அரிய செய்தி -
1
இமையைத் தீய்க்கும் கண்ணீர்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
காமம்
சேர்குளத்தார், குறுந்.4 :1, 2
பிரிவாற்றாமையால் வரும் கண்ணீராதலால் வெம்மையுடையதாகக்
கூறப்பட்டது.
துன்பத்தில்விடும் கண்ணீர் சூடாக இருக்குமா ? கண்ணீரின்
தன்மை குறித்து அறிவியல் கூறுவது யாது ? – ஆய்க.
குறுந்தொகை அரிய செய்தி -
2
மொழி பெயர் தேஎம்
குல்லைக் கண்ணி
வடுகர் முனையது
வல்வேற் கட்டி
நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
மாமூலனார், குறுந்.
11 : 5 – 7
கஞ்சங் குல்லையைத் தலைமாலையாக அணிந்த வடுகருடைய பகைப்புலம்,
வலிய வேற் படையையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ளது. நம் மொழி
பேசாது வேற்றுமொழி பேசப்படும். அந்நாட்டில் தலைவன் இருப்பினும்..
vaṭukar,
n. <வடுகு. வடுகர்.
People of the Telugu country;
தெலுங்கர். கதநாய் வடுகர் (நற். 212).
n. <வடுகு. வடுகர்.
People of the Telugu country;
தெலுங்கர். கதநாய் வடுகர் (நற். 212).
A caste of Telugu
immigrants from the kingdom of Vijayanagar into the Tamil country in the 16th
cent.;
பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர ராஜ்யத்திலிருந்துத் தமிழ்நாட்டிற் குடியேறிய ஒருசார் தெலுங்குசாதியார். ( தமிழ்ப் பேரகராதி )
பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர ராஜ்யத்திலிருந்துத் தமிழ்நாட்டிற் குடியேறிய ஒருசார் தெலுங்குசாதியார். ( தமிழ்ப் பேரகராதி )
இதனால் தெலுங்கு
மொழியின் தொன்மை அறியப்படும்.கட்டி என்பவன் சேரன் படைத் தலைவருள் ஒருவன். உறையூரை
ஆண்ட தித்தனுடன் போரிட அஞ்சி ஓடியவன்.
மேலும் காண்க : அகம்.44, 107, 213, 226, 295. நற்.212
குறுந்தொகை அரிய செய்தி -
3
கோசர்
வரலாறு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல்மொழி போல
ஒளவையார், குறுந்.
15 : 2, 3
கோசர் – மோகூர்ப் பழையனுடைய அவையத்து விளங்கிய ஒருவகை
வீரர். நாலூர்க் கோசர், வாய்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் –
பாராட்டப்படுகின்றனர்.தம் குலப் பெண்ணைக் கொன்றமைக்காக, நன்னனைக் கொன்ற சூழ்ச்சித்
திறம் உடையவர்.
மேலும் காண்க : குறுந்.73. அகம் 205, 251.
kōcar,
n.
An ancient caste of warriors;
பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார். மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகநா.15).
n.
An ancient caste of warriors;
பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார். மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகநா.15).
இலக்கியங்களில்
புகழ்ந்துபேசப்படும் நன்னன்- கோசர் வரலாற்றை ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும். மேலும்
காண்க : குறுந். 292, அகநா. 205.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக