ஞாயிறு, 12 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 24-26

குறுந்தொகை - அரிய செய்தி - 24
                                                            மடல் வடிவம்
 விழுத்தலை பெண்ணை விளையல் மாமடல்
மணிஅணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள் என்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி
             மடல்பாடிய மாதங்கீரன், குறுந். 182 : 1- 3
பனையின் உயர்ந்த முற்றிய பெரிய மடலால் செய்யப்பட்ட குதிரைக்கு, மணிகள்     அணிந்த பெரிய மாலையை முறையாக அணிவித்து, வெண்மையான எலும்பினை மாலையாக அணிந்துகொண்டு பிறர் இகழுமாறு அம்மடல் மா மேல் ஏறி ...
இவ்வழக்கம்  உண்மையா / இலக்கியப் புனைவா ,எச்சங்கள் இன்று உள்ளனவா ? குறிஞ்சி வாழ் மக்களின் வாழ்வியலை ஆய்க.
மேலும் காண்க : குறள். 1132, 1133. கலித்.139, 141 ( எருக்கம் பூ மாலை சூடி ) குறுந்.17
குறுந்தொகை - அரிய செய்தி - 25
214 - காமன் அரளிப்பூ
                                                              நேர்ந்து கொள்ளுதல்
விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்
                                   கொற்றன், குறுந்.218: 1-3

தலைவன் வாரா நிலையில் -  கொற்றவைக்குப் பலிக்கடன் நேர்ந்துகொள்ளுதல், காப்பு நாண் அணிதல், நிமித்தம் பார்த்தல், விரிச்சி கேட்டல் ஆகியன செய்யோம்.
குறுந். 260- தலைவிக்கு நன்னிமித்தங்கள் விசும்பில் குருகு உயரப் பறத்தல், புதரில் பூ மலர்தல், தோளில் வளை செறிதல்.தலைவனுக்கு இடைச்சுரத்துக் கன்று ஈன்ற பசு குறிக்கிடுவது தீ நிமித்தம். காப்புக்கட்டுதல் இன்று கிராமக் கோயில் சடங்கு – இன்று காசு முடிந்து போடுதல் உண்டு.இச்சடங்குகளின் வளர்ச்சி நிலையை ஆய்க.
குறுந்தொகை - அரிய செய்தி - 26
                                                                         காலக்கணக்கர்
அஞ்சுவரு பொழுதினானும் என்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே
                             காழார்க் கீரன் எயிற்றி, குறுந். 261 : 1 – 4
அச்சத்தைத் தரும் கூதிர்ப்பருவத்தும் என் நெஞ்சு  வருந்திப் புண்பட்ட துன்பம் காரணமாக ஊர் காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை எண்ணிக்கொண்டிருப்பது போல என் கண்கள் துயிலாவாயின.
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் (முல்லைப் 55) இருந்தனர்.

பகலில் நாழிகைக் கணக்கு - சூரிய ஒளி ; இரவில் நாழிகைக் கணக்கு  - அறிந்த முறைகருவிகள்கணக்கிடும் முறைகணிதம் கற்ற முறைஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக