திங்கள், 13 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 27-29

குறுந்தொகை - அரிய செய்தி - 27
                                                                            வெறியாடுதல்
மறிக்குரல் அறுத்துத் திணைப் பிரப்பு இரீஇ
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
                       பெருஞ்சாத்தன், குறுந். 263 : 1 – 3
வெள்யாட்டிக் குட்டியின் கழுத்தை அறுத்து, தினை அரிசி ந்ரம்பிய பிரம்பின் கூடையை வைத்து வெறியாடற்குச் செல்கின்ற ஆற்றின் நடுவில் அமைந்த மணல் திட்டில் பல இசைக் கருவிகள் ஒலிக்க வேலன் முதலியோரை ஆவேசித்துத் தோன்றுதல் .....
குறிஞ்சி நிலச் சடங்கு -  இஃது இல்லச் சடங்கா ?
மேலும் காண்க : திருமுருகா. 239- 242, அகநா. 292. குறுந்.362
குறுந்தொகை - அரிய செய்தி - 28
                                                          சேமச்செப்புஎன்சிபிஎச்உரையில் குழப்பம்
       அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
        சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே
                                                   ஓரிற்பிச்சையார், குறுந். 277 : 4, 5
  பனிக்காலத்திற்கு ஏற்ற விரும்பத்தக்க வெப்பத்தோடு கூடிய மெல்லிய நீரை, மூடியுடன் கூடிய காப்பினையுடைய கலத்தில் பெறுவாயாக.

                      சேமச் செப்பு என்பது ஒருவகை வெப்பம் காக்கும் தன்மையுடைய கலம் ஆகலாம். இஃது இன்றைய குடுவை போன்றதாகலாம். இதனைப் பயணக் குடுக்கை எனலாம். இயற்கைப் பொருளால் ஆன இக்குடுக்கை குறித்து ஆய்க.    
குறுந்தொகை - அரிய செய்தி - 29
                                                           குற்றமும் தண்டனையும்
  மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
                     பரணர், குறுந். 292 : 1 - 5
 கோசர் வரலாறுபெண்கொலை புரிந்த நன்னன்புனல் தரு பசுங்காய் தின்ற பெண்
 கோசர் குலப் பெண் என்பர். – பகைமுக ஊர்கோசர் / நன்னன்வரலாறுஆய்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக