தமிழமுது –.66 . தமிழர் இயற்கை வழிபாடு.
அறிவு வழிபாடு:
பாலியல் உறவு குறிக்கும் சடங்குகள்
தந்திர வழிபாடு.
மூல தந்திரம் ..(original Tantras) மனித உடல் குறித்த
ஆய்வு ‘தேகவாதம்’ எனப்பட்டது. தேகவாதம் – மருத்துவ அறிவியல் தோற்றம்.
உடலியல் ஓகம் (யோகம்)
எண்ணூல் சாங்கியம். இவை இரண்டும் –உலகாய்தம் / பூதவாதம்.
எண்ணிய யோகம் – உலகாய்தம் – வேத / வேள்விச்
சடங்குகளை எதிர்த்தது.
என்ணியம் (சாங்கியம் ஓகம், உலகாய்தம் > வேதங்களை விட உயர்ந்தது.
எண், எழுத்து > எண் –எண்ணியம் (சாங்கியம்)
; எழுத்து – தருக்கவியல்.
எண்ணியம், ஓகம், உலகாய்தம்
– ஒரு மரத்தின் கிளைகள் – தமிழர்கள் இதனை
‘ஐந்திரம்” என்று அழைத்தனர்.
கி.மு. 6க்கு
முன்னே தமிழர் ஐந்திரம் புகழ் பெற்றனர். இந்திய மெய்யியல் – தருக்கவியலின் மூல ஊற்றுகள்.
தொல்காப்பியம், திருக்குறள் இன்னபிற வேறு
எம்மொழியிலும் நூல்கள் இல்லை.
இவர்களே முனைவர்கள் –கடவுளர் – இக்காலக்கட்டத்தில்தான் கடவுள் வழிபாடு தோன்றியது.
வளமை, வீர வழிபாட்டுடன் – அறிவு வழிபாடு தோன்றியது. அறிவு வழிபாடுதான் சிவன்,
திருமால் வழிபாடு. முனைவர்கள் (கடவுளர்) மிகச்சிறந்த வானியல் அறிஞர்கள்.
நாள் மீன் தொகுப்பு – 12 இல்லம் (ராசி.)
ஒவ்வொரு திங்களிலும் கதிரவன் ஒவ்வொரு இல்லத்தில் தங்கிப் பெயர்வதாகவும் கதிரவன்
இயக்கம் அறிந்தனர். ஆண்டுக்கு
365 நாள்கள். ஆண்டு மேழ இல்லத்தி (ராசி) (சித்திரைத் திங்கள்) தொடங்குவதாகக்
கண்டனர்.
கிரேக்க வரலாற்று அறிஞர் மெகஸ்தனிஸ் இண்டிகா நூலில் பாண்டிய நாட்டை ஓர் அரசி ஆண்டு வந்தாள்;
அவள் தன் நாட்டை 365 கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு பகுதி அரசுக்குத் திரை செலுத்த வேண்டும் என ஆணையிட்டிருந்தாள்.
அதனால் ஆண்டு முழுவதும் அவளின் அரசு கருவூலம் நிறைந்தபடி இருந்தது”
என்று குறித்துள்ளார்.
………………………………………தொடரும்……………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக