வெள்ளி, 4 ஜூலை, 2025

தமிழமுது –.65 . தமிழர் இயற்கை வழிபாடு. தந்திர வழிபாடு:

 

தமிழமுது –.65 . தமிழர் இயற்கை வழிபாடு. 

தந்திர வழிபாடு:

தமிழரின் அறிவியல் வளர்ச்சிக்கான வித்தாகவும் அடி நிலமாகவும் அமைந்திருப்பது இந்தத்தந்திர வழிபாடு’. சிந்து சமவெளி நாகரிகம்  தமிழர்க்குரியது என் ஔறுதி செய்த  அலெக்சாந்தர்  கோந்த ரவோத் சிந்துவெளி நாகரிகத்தின் திறவுகோல் தமிழர்களின்  சித்தர் இலக்கியங்களிலேயே புதையுண்டு கிடக்கிறது என்றார்.

 

 தமிழர்களின் தாய்த் தெய்வங்கள் யாவும் போரோடு தொடர்புகொண்டவையாக இருக்க, வைதிகர்களின் பெண் தெய்வங்களோ போரோடு தொடர்பற்றவையாக உள்ளன. வேதப் பெண் தெய்வங்கள் யாவும் அவற்றின் கணவர்கள் தெய்வங்கள் என்பதால் மட்டுமே பெருமை பெற்றனவே அன்றித் தமக்கென எந்த உயர்வும் சிறப்பும்  பெற்றவையல்ல..

தமிழரின் வழிபாடாகத் தொடங்கிக் கொற்றவை என்னும் வீர வழிபாடால வளர்ச்சியடைந்ததாகும்.

 முருக வழிபாடு:

முருகன், சேயோன், மகன், சேய், என்று கூறும் திருமுருகாற்றுப்படை  கொற்றவை மகனே முருகன். இதுவும் வீர வழிபாடே.  பெண் தலைமைச் சமுதாயம்ஆண் தலைமைக்கு , “வெறியாடும் கந்தனும் தொல் தமிழர் வீர வழிபாட்டைக் குறிக்கும்.

முருகனுக்கு  ஆடு வெட்டிப் படைக்கும் மரபு  என்பதை நற்றிணை

அணங்கறி கழங்கிற் கோட்டங்காட்டி

வெறியென உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து

அன்னை அயரும் முருகு.” என்கிறது.

முருகனின் செங்காந்தள் பூவளமைக்குறி.

முருகனை ஆண்டியாக வணங்குவதும் விரதம் இருப்பதும் புலவுப்படையலைத் தவிர்ப்பதும்  ஆரிய நடைமுறைகள்.

அறிவு வழிபாடு:

 

………………………………………தொடரும்……………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக