செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள் - அரசாள்வோர் பார்வைக்கு

கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக் கூழ் அள்ளற் பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே
    தொண்டைமான் இளந்திரையன்,புறம்.185
உரை:வண்டியைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்  வழியில் ஒரு துன்பமும் இன்றி வண்டி இனிதாகச் செல்லும் திறனற்றவன் வண்டி ஓட்டினால் அது பகையாகிய செறிந்த சேற்றிலே சிக்கி மிகப் பல தீய துன்பங்களை மேலும் மேலும் உண்டாக்கும்.( அரசன் திறம்பட ஆட்சி நடத்தாவிடின் உட்பகை, புறப் பகையாகிய சேற்றில் அழுந்தித் துன்புறுவான், நாடும் சீர் கேடு அடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக