செவ்வாய், 25 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 11. ஆய்தம் –எழுத்தாய்வு

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 11.

ஆய்தம் –எழுத்தாய்வு

”குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே -38

ஆய்தமாகிய புள்ளி குற்றெழுத்தின் முன்னர் உயிரொடு புணர்ந்த வல்லெழுத்து ஆறன் மேலது. இளம்பூரணர்.

அஃதாவது, குற்றெழுத்தின் பின்வரும் ஆய்தப்புள்ளி ஆறு வல்லெழுத்துக்களின் மேல் உயிரெழுத்தோடு வரும். எஃகு, கஃசு, அஃது என்றவாறு.

ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் என்றார். –நச்சினார்க்கினியர்.

குற்றிய லிகரம் குற்றிய லுகரம்

ஆய்தம் என்ற

முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன”- -எழுத்.2.

ஈண்டு முப்பாற் புள்ளி என்பது ஆய்தத்தை மட்டும் குறியாது மூன்றையும் குறிக்கும். குற்றியலிகரம், குற்றியலுகரமும் போல அதுவும் ஒன்று என்பார் வ.சுப. மாணிக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக