என்
பழைய குறிப்பேடு- பக்கம்: 1
அயலூர் சென்று பணி புரிவது குற்றம்
“ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே” –
பொன்முடியார்,புறம்.312
தாய்
உடலையும் தந்தை உடலகத்து நிலவும் உயிரறிவையும் ஓம்பும் கடப்பாட்டினராதலால், ‘புறந் தருதல்’ தாய்க்குக் கடனாதலும் சான்றோனாக்குதல்
தந்தைக்குக் கடனாதலும் எடுத்தோதப்பட்டன. அவ்வவ்வூரிலிருக்கும்
கொல்லர் முதலியோர் அவ்வவ்வூரவர்க்கு வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும் அயலூர்
சென்று பணி செய்வது குற்றமென்றும் முதற் குலோதுங்க சோழன் காலத்து ஒரு கட்டுப்பாடிருந்ததெனத்
திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று (A.R.No.205 of 1919) கூறுவது
பொன்முடியார் இப்பாட்டின்கட் கடனாக வகுக்கும் கொள்கையை வற்புறுத்துகிறது. ஈன்றாள் முதலியோர்க்கு
முறையே புறந்தருதல் முதலாகவுள்ள தொழிற் பண்புகளைக் கடனாகக் கூறியது அவற்றை நன்குணர்ந்து
வழுவாது ஆற்றல் வேண்டும் என்றற்கெனவறிக”
- உரை வேந்தர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக