வெள்ளி, 7 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.25.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.25.

முத்தரையர் -களப்பிரர்

ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர் சமண பெளத்த மதங்களை ஆதரித்து வளர்த்தனர் என்றாலும் நாட்டின் நிலை எப்படி இருந்தது என்று அறிதற்குப் போதிய சான்றுகள் இல்லை. 


பாண்டியன் கடுங்கோனும் பல்லவ சிம்மவிஷ்ணுவும் ஏறத்தாழ கி.பி. 575இல் களப்பிரரை வெற்றி கொண்டனர். வீழ்ச்சி அடைந்த களப்பிரர் சிற்றரசர்களாக தஞ்சாவூர், செந்தலை ஆகிய ஊர்களில் தங்கிவிட்டனர். பிற்காலத்தில் களப்பிரர் முத்தரையர் என்று பெயர் பெற்றனர். சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று தரைகளை அரசாண்டவர் என்ற பொருளுடைய சொல்லாக இது இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்


.செந்தலைத் தூண், சாசன்ங்கள்வழி முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று அறிய முடிகிறது. நான்கு தூண்களிலும் பெரும்பிடுகு முத்தரையனுடைய சிறப்புப் பெயர்களில் ‘ஸ்ரீ கள்வர கள்வன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் களவர கள்வரும் களப்பிரரும் ஒருவரே என்று கருதுகின்றனர். மேலும் ‘வல்லக்கோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்” எனத் திருக்காட்டுப்பள்ளி நியமம் கல்வெட்டு கூறுகிறது. வல்லத்தரசன், தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டப்பெயர்கள் கள்ளர் வகுப்பினர்க்கு உரியதாதலால் பெரும்பிடுகு முத்தரையனும் கள்வர் (கள்ளர்) மரபினர் என்பர். எனவே இவரும் களப்பிரராகிறார்.

……………………தொடரும்……………………………….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக