ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 16. ஆய்தம் –எழுத்தாய்வு – 6.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 16.

ஆய்தம்எழுத்தாய்வு – 6.

ஆய்தம் – முப்பாற் புள்ளியா…ஒரு புள்ளியா..?

ஆய்தப்புள்ளி என்ற எழுவாய்க்கு மிசைத்து என்ற ஒன்றன்பால் வினைமுற்று இருத்தலின் புள்ளி ஒன்றே என்பதும் குறியதன் முன்னரும் ஆறன் மிசைத்தும் என்பதனால் நடுவே இடப்பக்கத்து அடுத்து நிற்கும் என்பதும் போதரும். காண்க : எ.கு, க.சு, அ.து, தத்தமிசைகள் ஒத்தன என நூன் மரபிலும் வகாரமிசையும் எனப் புள்ளி மயங்கியலிலும் அத்தும் ஆன்மிசை என அவ்வியலிலும் இடப்பக்கத்து அடுத்து என்ற பொருள்பட வருதலையும் உணரலாம்.

இம்மூன்றும் சார்ந்துவரும் ஒலிநிலையில் மட்டும் ஓரினம் அல்ல. புள்ளிபெறும் வடிவிலும் ஓரினப்படும் என்று உடன் தெரிவிக்கவே முப்பாற்புள்ளி என்றார். எனவே ஒவ்வொன்றும் புள்ளிபெறும் என்பது தெளிவு. குற்றியலிகரம் குற்றியலுகரம் உரிய இகர உகர வடிவின் மேல் ஒரு புள்ளிபெறும்.  மியா0, நாடு0 எனவரும் முதலெழுத்து வடிவினவே இவற்றின் வடிவன். புள்ளிமேலேபெறுவது சார்பு காட்டுவதாகும்.

எனவே ஆய்தம் ஒரு புள்ளியே பெறும் என்பதாம். எ . கு,  அ .           றிணை,        வெ . கு  எனவரும்”  என்பார் அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

முடிவுரை

கணக்கியலில் சமன்பாடுகள் (குறியீட்டில்) ஃ ( ) என்று குறிக்கப்படுகிறது.

சுருக்கெழுத்திலும் கணக்கிலும் பயன்படும் இந்த முப்பாற்புள்ளி  விளக்கத்தையும் விடையையும் இணைக்கும் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீடு ஜான் ரன் என்பவரால் 1659 இல்  முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தமிழில்  உள்ள ஃ  ஆய்தம் ஆங்கிலத்தில் ஒரு சிறப்புக்குறியீடாக  அமைகிறது ..ஆய்க.

முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக