புதன், 11 ஏப்ரல், 2012

சங்க இலக்கியச் செய்திகள் -

சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே
    மாறோக்கத்து நப்பசலையார்,புறநா.280:13-15
உரை:- சிறிய வெள்ளிய ஆம்பலிட்த்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வ்ழிப் பின்னே வாழும் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம் எனத் தலைவி வருந்துகிறாள்.
மகளிர் கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத த்ம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவி (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீ ந்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் என்வே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற்.44) எனவும் வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.