செவ்வாய், 10 டிசம்பர், 2019


மூடநம்பிக்கைகளில் முற்றித்திரண்ட மூளையில்
எழுத்தாணியை இறக்கிய திருவள்ளுவர்...!

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையான் காணப் படும். –--- ௨௯அ

உள்ளுக்குள் நிறைந்த அழுக்கை (கொலை, களவு, காமம்….) வைத்துக்கொண்டு, குளித்து மூழ்கிப் பூசுவன பூசுவதால் மட்டும் ஒருவன் தூய்மை உடையவனாக முடியாது ;   அப்பழுக்கற்றவன்,  உண்மையைப் பேசும் உயர் குணத்தால் மட்டுமே அறியப்படுவான்.
புற அழுக்கை நீரால் கழுவு ; அக அழுக்கை வாய்மையால் கழுவு.

எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்
செய் தொழிலால் காணப்படும்.” ---நாலடியார்.

எவ்வளவுதான் செல்வம் பெற்றவராயிருந்தாலும் செய்யும் தொழில்களைக் கொண்டு அவர்கள் கீழ் மக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


1 கருத்து:

  1. இதைப் படித்ததும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் நினைவிற்கு வந்தன ஐயா.

    பதிலளிநீக்கு