”ஓங்கு பரிபாடல்” – இது தமிழ்
மொழிக்கே சிறப்புரிமையாகப் பெற்ற அகப் பொருள் – புறப் பொருள்
ஆகிய இருபொருள்களையும் தழுவிப்
புலமைச் சான்றோரால் ஆக்கப்பட்ட செவ்விய நூலாகும்.
இந்நூல் முழுமுதற்
கடவுளராகிய திருமாலையும் செவ்வேளாகிய
முருகப்பெருமானையும் உலகு புரந்தூட்டும் உயரிய ஒழுகலாற்றைக் கொண்ட , வையைப் பேரியாற்றையும் வாழ்த்துதலாக
உட்பொருள் கொண்டு இடையிடையே நம் தமிழகப் பண்பு ,அன்பு ,காதல், வீரம் , அறம்,
காவிய ஓவியத் திறங்களை விளக்கிச் செல்லும் பெருமை மிக்கது. அந் நூற்பாடல்களுள் நம் தமிழ் மாநிலத்துச் சிதைந்தன போக எஞ்சிய ( 22 ) பாடல்களே இன்றுகாறும் நம்மிடையே நின்று நிலவுகின்றன.
“பரிபாடலில் முருக வணக்கம் என்னும் கட்டுரை, பரிபாடல் கூறுகிற
முருக வழிபாடு, உலக இன்ப
வாழ்க்கையைப் பெறுவதற்காகவே மக்கள் முருகனை வழிபட்டனர், வீடு பேற்றை
(முத்தியை)க் கருதி மக்கள் வழிபடவில்லை என்பதையும் அக்காலத்தில் முருகன் வீடுபேறு அளிக்கிற தெய்வமாகக் கருதப்படவில்லை என்பதையும் கூறுகிறது.”
– மயிலை சீனி. வேங்கடசாமி, (அணிந்துரை, பேராசிரியர் நா. வானமாமலை, தமிழர்பண்பாடும் தத்துவமும் –)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக