முப்பத்திரண்டு
ஓமாலிகையாவன –
” இலவங்கம் பச்சிலை கச்சோலம் ஏலம்
குலவிய நாகனங் கொட்டம் – நிலவிய
நாகமதா வரிசி தக்கோலம் நன்னாரி
வேகமில் வெண்கோட்டம் மேவுசீர்
போகாத கத்தூரி வேரி யிலாமிச்சம் கண்டில்வெண்ணெய்
ஒத்தகடு நெல்லி உயர்தான்றி துத்தமொடு
வண்ணக் கச்சோலம் அரேணுக மாஞ்சியுடன்
எண்ணும் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும்
புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம்
பின்னு தமாலம் பெருவகுளம் – பன்னும்
பதுமுகம் நுண்ணேலம் பைங்கொடு வேரி
கதிர்நகையா
யோமாலிகை “ என்னுமிவை.
( 32 ஓமாலிகை, அகராதியிலும் பொருள் காண்டல் அரிதாயிற்று – மூலிகை ஆய்வாளர்களிடத்துப் பொருள் அறிந்து கொள்க. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக