சனி, 29 பிப்ரவரி, 2020

வணக்கம் நண்பர்களே...!


நாளை மலரும்

வலைப்...பூ

தன்னேரிலாத தமிழ்’

திங்கள், 24 பிப்ரவரி, 2020

சிறுகதை

சிறுகதை

“அலோ...அம்மா..!

”என்னம்மா...பாப்பாவுக்கு சோறு ஊட்டினியா...?”


“தயிர்ச் சோறு ஊட்டிக்கிட்டு இருக்கேன்மா..!’


“தொட்டுக்க என்னா வச்சிருக்கே..?”

“ரெண்டு வீடியோ வச்சிருக்கேன்மா..!”

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

அன்புடையீர் வணக்கம்...!
‘தன்னேரிலாத  தமிழ்’ ஒரு நெடுந்தொடருடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்; விரைவில்...நன்றியுடன் - முனைவர் இரெ.குமரன.

புதன், 5 பிப்ரவரி, 2020

”வேதாளம் சேருமே....


வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமேமூதேவி
சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. – நல்வழி.

வழக்கு மன்றத்தில் உண்மை, பொய்களை ஆராய்ந்து நடுநிலையாக, மனச்சான்றுடன் தீர்ப்பு வழங்காதவரின் வீட்டில் பேய்கள் குடிபுகும், எருக்கஞ்செடிகள் பூக்கும், பாதாள மூலி (நெருஞ்சில் / சீந்தில் கொடி) படரும், மூதேவி வீட்டிற்குள் குடியேறுவாள், பாம்புகள் விரும்பி வாழும்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

“வஞ்சித்துப் பழுகும்....


வஞ்சித்துப் பழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் கானுங்கொல் என்ரு அஞ்சி
அங்கம் குலைவது அறிவு.” ====நீதிநெறிவிளக்கம்.

பொய் வேடம் பூண்டு பிறரை வஞ்சித்து வாழும் மூடர்களே..!  அனைவரையும் ஏமாற்றிவிட்டோம் என்று மகிழ்ச்சி கொள்ளாதீர்கள் ; நீங்கள் வஞ்சித்தவற்றை யெல்லாம் எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான் என்பதை உணர்ந்து உங்கள் உடல் பதறுவதே உண்மையான இறை அறிவாகும்.

திங்கள், 3 பிப்ரவரி, 2020


சிவனைத் தமிழால் வழிபாடு....!

”வில்வம் அறுக்குக்கு ஒவ்வா மென்மலர்கள் நால்வர் எனும்
நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான் மறைகள் மெல்லிய நல்லாய்
ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே
சோமசுந்தரற்கு என்றே சொல்.” –நீதி வெண்பா.

சோமசுந்தரக் கடவுளுக்கு எல்லா மலர்களுமே வில்வத்திற்கும் அறுக்குக்கும் இணையாக மாட்டா ; ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இயற்றிய தேவார திருவாசகங்களுக்கு இணையாக மாட்டா; மந்திரம் எதுவும் திரு ஐந்தெழுத்திற்கு (நமசிவாயா) ஒப்பாகா. எனவே வில்வமும் அறுகும் கொண்டு வழிபாடு செய்து தேவார திருவாசகங்கள் ஓதி, ஐந்தெழுத்தை நினைந்து இறைவணை வணங்குதல் வேண்டும்.