சனி, 10 ஏப்ரல், 2021

தன்னேரிலாத தமிழ்-263.

 

தன்னேரிலாத தமிழ்-263.

சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ

ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ தேறி

உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி

அரிய துணிவதாம் மாண்பு.” -அறநெறிச்சாரம், 126.

சோறு உண்ணுதலும் செய்வதற்கு அரியன செய்வேன் என்று கூறுதலும் பல்வேறு  ஊர்திகளில் ஏறிச் செல்லுதலும் ஆகிய செயல்களை உலகத்தில் பலரும் செய்வர். ஆகவே தகுதி மிக்க அரிய செயல்களைச் செய்து, வீடு பேற்றினை அடையக் கருதுவதே ஒருவனுக்குப் பெருமை தருவதாகும்.

1 கருத்து:

  1. அரிய செயல்களைச் செய்து, வீடு பேற்றினை அடையக் கருதுவதே ஒருவனுக்குப் பெருமை தரும்....நூற்றுக்கு நூறு உண்மை ஐயா.

    பதிலளிநீக்கு