தன்னேரிலாத
தமிழ்-262.
“சென்ற காலமும் வரூஉம் அமையமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர்.”
-மதுரைக்காஞ்சி, 477 – 481.
உயர்ந்தோர் உலகத்துச்
செய்திகளையும்; எல்லா நிலங்களின்
செய்திகளையும்
;தம் நெஞ்சால்
அறிதற்குக்
காரணமாகிய
அறிவுடையர்,
சென்ற காலத்தையும்
வருகின்ற
காலத்தையும்
இன்று இவ்வுலகில்
தோன்றி நடக்கின்ற
ஒழுக்கத்தோடு
மிக உணர்ந்து,
அவற்றை உலகத்தார்க்கு
உரைப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக