தன்னேரிலாத
தமிழ்-264.
432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
கொடை வழங்காத சிறுமையும்;
போற்றத்தகாத
மான உணர்ச்சியும்; விரும்பத்தகாத
மகிழ்ச்சியும்
அரசனுக்குக்
குற்றங்களாகும்.
“தம்முடைய
ஆற்றலும்
மானமும்
தோற்றுத்
தம்
இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக
பின்னர்ச்
சிறுவரை ஆயினும் மன்ற
தமக்கு
ஆங்கு
இறுவரை இல்லை எனின்.” –நீதிநெறிவிளக்கம்,
41.
இனிமேல் வாழப்போவது
சிறிது காலமாக
இருந்தாலும் உறுதியாகத்
தமக்கு இறப்பு
இல்லை என்றால்
தம்முடைய வலிமையையும்
மானத்தையும் இழந்தும்
தம்முடைய இனிய உயிரைக்
காப்பாற்ற விரும்பினாலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக