தன்னேரிலாத தமிழ் –393: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
300
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
உண்மையிலேயே யாம் கண்டவற்றுள் வாய்மையைவிடச் சிறந்த ஒன்று வேறு எதுவும் இல்லை. மனிதனுக்குப் பெருமை தருவது வாய்மை ஒன்றே
வாய்மை - எவராலும் வெல்லுதற்கு அரிய ஒன்று.
“ கள்ளார் கள்உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் – தள்ளியும்
வாயில் பொய் கூறார் வடுவறு காட்சியார்
சாயில் பரிவது இலர்.” – நாலடியார், 157.
சான்றோராவர் திருடார்; கள் குடியார்; தள்ளத்தக்கனவற்றைத் தள்ளி வைப்பார்; எவரையும் இகழ்ந்து பேசார்; வாயால் பொய் மொழியார்; வறுமை வந்துற்றபோதும் வருத்தம் கொள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக