தன்னேரிலாத தமிழ் –394: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் .
வெஞ்சினத்தால் விளைவது தீமை ஒன்றே அதனால், எவரிடத்தும் சினம் கொள்வதை மறந்துவிடு.. முற்றிலும் மறந்துவிடு.
வள்ளுவத்தில், நினைக்க வேண்டியவை நிறைய இருக்க, மறக்க வேண்டிய ஒன்றே ஒன்றை, மறவாது கூறிய வள்ளுவரை மறக்காதே.
“ கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்.” ---மணிமேகலை,23.
காரிகையே..! கற்ற கல்வி ஒன்றே மெய்யுணர்வு ஆகாது ; உள்ளத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கியவர் எவரோ அவரே முற்றவும் கற்ற அறிவுடையோர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக